Hadabima Authority

விஷேட கருத்திட்டம

கருத்திட்டம்

 

  1. கருத்திட்டம் -           பலாமரக்கன்று பத்து இலட்சம் நடுகை செய்தல்

 

  1. நிறுவனம்  -           விவசாய அமைச்சு ,இலங்கை ஹதபிம அதிகாரசபை

 

  1. கருத்திட்ட பிரதேசம் - நாட்டின் சகல மாவட்டங்களும், பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 

  1. பொதுவான தகவல்கள்  -       

 

பாலா (விஞ்ஞானப் பெயர் - Artocarpus heterophyllus Lam)என்பது இலங்கையில் பரவலாக நடுகை செய்யப்படுகின்ற இந்நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு மரமாகும். அது அரசாங்கத்திற்கு உரிய கானகங்களில் பலகைக்கு பெறுமதியாக நடுகைச் செய்யப்படுகின்ற மரங்களுடன் இடைப் பயிராகவும் நடுகைச் செய்யப்பட்டு அங்கு உள்ள உணவுகள் பெறுமதி காரணமாக அதிகமான வீட்டுத் தோட்டங்களிலும் நடப்படுகின்றன. அது சோற்றுக்கான மாற்று உணவாக கருதப்படுகின்றது. இதனால் அதிகமான கிராமிய மக்களது பாரம்பரியமாக அது சோற்று மரம் எனவும் அறிமுகம் செய்யப்படுகின்றன. அது வெப்பமண்டல வலயத்தில் ஆசியா நாடுகளில் மக்ளுக்கு மிகவும் முக்கியமான மரமாக காணப்படுவதற்கான காரணம் அது உணவிற்காகவும், பலகைக்காகவும், கால்நடை உணவாக, எரிபொருளாக, ​ஆரோக்கியப் பெறுமதி வாய்ந்ததாகவும் மற்றும் சாயங்கள் பிரித்தெடுக்கப்படுவதற்காகவும் போன்ற பல நன்மைகள் இருப்பதனாலாகும். வங்காளதேசத்தில் அது மிகவும் பிரபல்யம் வாய்ந்த பழமரங்கள் மத்தியில் நில அளவு மற்றும் உற்பத்தியில் மூன்றாம் நிலமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதுடன் அது அந்நாட்டிற்கு தேசிய பழமாகவும் கருத்திற் கொள்ளப்படுகின்றன. தற்காலத்தில் இலங்கையின் பழம் ஒன்றாக பலா உற்பத்தி வீட்டுத் தோட்டங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டில் வருடாந்தம் பலா உற்பத்தி மெற்றிக் தொன் 2.24 அளவினதாக காணப்படுவதுடன் நடுகைச் செய்யப்பட்டுள்ள நில அளவு 50000 ஹெக்​​டேயர் மாத்திரமாகும். மேலும் மறக்கறி ஒன்றாக, பழுத்த பழமாகவும் தயார் செய்த உற்பத்திகளாக பயன்படுத்த முடியுமான வகையாக பொருட்டு இந்நாட்டினுள் பாரிய  கேள்வி காணப்படுகின்றது. அவ்வாறே அது மிகவும் உச்ச பயனுடனான மற்றும் பல்வேறு மக்கள் பிரிவினர் மற்றும் ஏழை விவசாயிகள் மத்தியில விருப்பம் காட்டுகின்ற கூடிய பிரமானத்துடனான பழங்கள் மத்தியில் ஒன்றாகவும் இதனை இனங்காண முடியும். இலங்கையில் இந்த பழம் புரதம் காபோவைதரேற்று மற்றும் கனிம உப்புகளின் மலிவான ஆதாரமாகவும் கருதப்படுகிறது. 

 

  1. கருத்திட்டத்தை செயற்படுத்துவதன் நோக்கம் பலா மர உற்பத்தி மற்றும் உற்பத்தியை மேம்படுத்துதல்
    ◦ அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பத்தின் ஊடாக பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியின் பொருட்டு இட்டுச் செல்லல்
    ◦ பலா சார்ந்த உற்பத்திகள் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற புதிய தொழில்நுட்ப கருவியை பிரபல்யப்படுத்துதல்
    ◦ பலா மற்றும் அது சார்ந்த உற்பத்தியின் பொருட்டு அதிக கேள்வியை உருவாக்குதல்
    ◦ நடப்படாத காணிகளில் பசுமை உள்ளடக்கத்தை ஏற்படுத்துதல்
    ◦ உணவு பாதுகாப்பு உள்நாட்டு உணவின் ஊடாக பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.  

 

  1. கருத்திட்டத்தின் பொருட்டு இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பயிர்ச் செய்யப்படாத நிலங்களில் ஏற்படுகின்ற சூழல் சமனின்மை
    ◦ உள்ளூர் உணவு பயன்பாட்டு முறைகள் மூலம் சமூகத்தை விழிப்பூட்டல்.
    ◦ பலா அறுவடை உபயோகத்திற்கு எடுக்கப்படாமல்  அழிக்கப்படுகிறது
    ◦ இலங்கையில், 80 தசாப்தங்களில் 23% சதவிகித பசுமை உள்ளடக்கமானது தற்போது 13% சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    ◦ உள்நாட்டு மரபலகை  தேவைப்பாட்டினை இறக்குமதி செய்வதன் மூலம் மரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
    ◦ இலங்கையின் பழம் தேவைகளுக்கு வெளிநாட்டு சந்தைகளில் கவனம் செலுத்துதல்.
    ◦ மீண்டும் கானகச் செய்கை நடவடிக்கையின் பொருட்டு உள்நாட்இல் இல்லாத மரங்களை பயன்படுத்துதல்
     

 

  1. கருத்திட்டத்தை செயற்படுத்துவதில் நிறுவனத்தின் தலையீடு

 

பலா கன்று 10 இலட்சம் நடுகைச் செய்யும் ​தேசிய  வேலைத்திட்டத்திற்கு அமைய செயற்பணி நடவடிக்கைகள் இலங்கை ஹதபிம அதிகாரசபைக்கு சாட்டப்பட்டுள்ளது. 2018, 2019, 2020 போன்ற வருடங்களினுள் இந்த எதிர்பாரத்த இலக்கினை அடைய வேண்டி உள்ளது. அத்துடன் விவசாய அமைச்சுக்கு உரிய ஏனைய நிறுவனங்களுடன் முறையாக தொடர்பு கொள்ளல் ஊடாக உரிய இலக்கினை அடைந்து கொள்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளன. விஷேடமாக விவசாய திணைக்களத்தினதும் மற்றும் கமநல சேவை திணைக்களத்தினதும் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. விஷேடமாக ஒட்டல் முறை மற்றும் விதை பலாச் கன்றுகளை பெற்றுக் கொள்வதற்கு இந்த நிறிவனங்களது பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

  1. கருத்திட்டத்தின் பெறுபேறு

1. ஆயிரம் குளம் ஆயிரம் கிராமம் வேலைத்திட்டத்தின் பயனாளிகள்
2. இலங்கை ஹதபிம அதிகார சபையின் அபிவிருத்தி பயனாளிகள்
3. இது தொடர்பில் கவனம் செலுத்துகின்ற விவசாயிகள் மற்றும் விவசாய ஒழுங்கமைப்புக்கள்
4. நகர பூந் தோட்டங்கள் - நக அபிவிருத்தி அதிகார சபை
5. வீதி பசுமை கீற்று - வீதி அபிவிருத்தி சபை
6. சிங்ஹ ஒழுங்கமைப்பு உறுப்பினர்கள்
7. சூழல் ஒழுங்கமைப்பு
8. அரச நிறுவனங்கள் 

 

  1. பிரதான செயற்பாடுகள்/உப செயற்பாடுகளுக்கான செலவு மதிப்பீடு

 

செயற்பாடுகள்

உப செயற்பாடுகள்

நிதி ரூ.மி.

பத்து இலட்சம் பலாக் கன்றுகளை நடுகைச் செய்தல்

1.      ஆரம்ப அறிவூட்டல் இணைப்புச் செய்தல் கூட்டங்களை ஒழுங்கமைத்தல் (கூட்டங்கள் 100)

0.50

 

2.      ஒட்டல் முறை பலாக்கன்றுகளை வினியோகித்தல் (கன்றுகள் 100,000)

20.00

 

3.     விதை பலாக்கன்றுகளை வினியோகித்தல் (கன்றுகள் 200,000)   

8.00

 

4.      அறிவூட்டுவதற்கான விளம்பர மற்றும் ஊடக மேம்பாட்டு வேலைத்திட்டம்

4.00

 

5.       பலா சார்ந்த உற்பத்தி நுகர்வினை பிரபல்யப்படுத்துதல்

1.00

 

6.      போக்குவரத்துச் செலவு

1.50

 

7.      நிர்வாகச் செலவு

1.05

 

மொத்தம்

36.05

 

10. தேசிய அபிவிருத்தியின் ஊடாக கருத்திட்டத்தின் நிலைப்பாடு

அதி மேன்மைதகு ஜனாதிபதி அவர்களது தலைமையின் கீழ் ஜனாதிபதி செயலாளர் பணிமனை விஷேட அபிவிருத்தி அலகின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற கானகச் செய்கை "வனரோபா" வேலைத்திட்டத்திற்கு தேசிய உணவு உற்பத்தி தூண்டல் வேலைத்திட்டமும் இக்கருத்திட்டத்தின் ஊடாக பங்களிப்பினை பெற்றுத் தருகின்றது. அவ்வாறே, விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களது எண்ணக்கருவில் செயற்படுத்தப்படுகின்ற "நாம் நட்டியே நாம் சாப்பிடுவோம்" எனும் விரைவான செயற்பாட்டு அபிவிருத்தி வேலைத்தி்டத்தில் ஒரு செயற்பாடாக இதனை இனங்காண முடியும்.

 

  1. செலுத்தல் கருத்திட்டத்தின் வரவு செலவு திட்டம்

வருடம்

செயற்பாடு

நிதி.ரூ.மி.

2018

பலாக்கன்று மூன்று இலட்சம் நடுகை செய்தல்   

35.000

2019

பலாகன்று  100,000 நடுகை செய்தல்

20.000

2020

பலாகன்று 100,000 நடுகை செய்தல்

20.000

 

 

12.நிதிப் பிரமானம்

தொடர் இலக்கம்

நிதி அளவு

3 வருடத்திற்கான செலவு

 ரூ.மி.

1

விவசாய அமைச்சு

75.000

 

13.கருத்திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள்

நிதிப்பாய்ச்சல்

2018

 

2019

2020

விவசாய அமைச்சு

1.05

0.06

0.06

செலவு

1.05

0.06

0.06

 

  1. திட்ட அமுலாக்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள்

இத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கத்தினை கருத்திற் கொள்கையில் இலங்கையில் விரைவாக-குறைத்துக் கொண்டு செல்வதை மீண்டும் நிலைப்படுத்தும் பொருட்டு பத்து இலட்சம் கன்றுகளை நடுகைச் செய்தல் ஊடாக உச்ச பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடிவதுடன் இதன் ஊடாக சூழலியல் சமநிலையை பாதுகாக்க பங்களிப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.மேலும் அது பசுமை உள்ளடக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை குறைத்து கொள்வதன் பொருட்டு ஒரு நேர்மறையான விளைவை கொண்டுள்ளது. அவ்வாறே மர நடுகையை ஸ்தாபிக்கின்ற போது நிலத்தில் மண் அரிப்கை குறைத்துக் கொள்ளல் மற்றும் நீர் மூலங்களை பாதுகாகக்கவும் துனை நிற்கின்றது.

மொத்த நன்மைகளையும் கவனத்திற் கொள்கையில் பலா மரம் அரிசிக்கு பதிலான மிகப் பெரிய மாற்றுனவாகும். அவ்வாறே பலகைக்கான பெறுமதியும் கூடிய ஒரு மரமாகும். மற்றும் எரிபொருள் பெற்றுத் தருவதில் துணையாக உள்ளது. மிகவும் சுவையான பழமாக நுகர்கின்ற இந்த மரம் அதிகளவிலான பொருளாதார பெறுமதியை பெற்றுத் தருகின்ற ஒரு மரமாகும்.

 

 

  1. கருத்திட்டத்தினை செயற்படுத்துகின்ற முறைமை

விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சினால் செயற்படுத்தப்டுகின்ற பத்து இலட்சம் பலாகன்று நடுககை செய்யும் கருத்திட்டத்தின் கண்காணிப்பு இலங்கை ஹதபிம அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கு அமைய விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவை திணைக்களம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொண்டு இந்த கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்பார்கக்ப்படுகின்றது. பத்து இலட்சம் கன்றுகளை நடுகைச் செய்வதற்கு 3 வருடங்களில் முடிவுருத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் திட்டமட்டு வருவதுடன் ஒட்டல் கன்றுகளை பெற்றுக் கொள்வதற்கு விவசாய திணைகக்ளத்தினால் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது விதைக் கன்றுகளை கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கும் இலங்கை ஹதபிம அதிகார சபையின் பண்ணையில் இருந்தும் மற்றும் சமூக முயற்சியான்மையாளர்களிடம் இருந்தும் நாற்று மேடையின் ஊடாக கன்றுகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கன்று நடுகை நடவடிக்கைகள் பொருட்டு விவசாய ஒழுங்கமைப்புக்கள் முதியோர் ஒழுங்கமைப்புக்கள் பாடசாலை, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. உழவர் மக்கள் பொருட்டு கன்றுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் மேலாக நடுகை மேற்கொள்ளப்படாது இருக்கின்ற ஆயினும் பசுமை வலயமாக அபிவிருத்தி செய்ய இயலுமான நிலப்பகுதிகளுக்கு
நடுகை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. 

 

 

  1. பதவியனியினரின்  தேவைப்பாடு

இந்த கருத்திட்டத்தை செயற்படுத்துவதன் பொருட்டு மேலதிக பதவியனியினர்  தேவைப்படாது இருப்பதுடன் அதிகாரசபையின் கள முகாமை பொறிமுறையினுள் வலய முகாமையாளர்கள் மற்றும் அலகு முகாமையாளர்களது ஆய்வு கற்கையின் கீழ் கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரசபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படாத மாவட்டங்களில் மாவட்ட விவசாய பணிப்பாளர்களதும் மற்றும் உதவி கமநல சேவை ஆணையாளர்களதும் பங்களிப்புடன் விவசாய உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் விவசாய ஆலோசகர்களதும் பங்களிப்புடன் ஆய்வு பங்களிப்பு என்பவற்றினுள் கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

17.விண்ணப்பகாரரது விபரம்

நிறுவனம்                -     இலங்கை ஹதபிம அதிகாரசபை

முகவரி                       -     கண்னொறுவை , பேராதனை

தொலைபேசி இலக்கம்        -     081-2388107, 081-23883434,

தொலைநகல்                 -     081-2388132

இணைப்பு உத்தியோகத்தர் -        

பெயர்                        -   பி.இ.எஸ்டப்லியு குமார.     

பதவி                      -   உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)   

தொலைபேசி இலக்கம்       :  081-2388343 / 0718698459

 

பிரிவு: